INDvsSL ODISERIES: 20 ஓவர்களில் இலங்கை அணி 116/3 ரன்கள் குவிப்பு.!
இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் குவிப்பு.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை அணி, முதல் விக்கெட்டாக அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு இறங்கிய குஷல் மெண்டிஸ் மற்றும் நுவைந்து பெர்னாண்டோ இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்து வந்தனர். குஷல் மெண்டிஸ் 34 ரன்களில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக தனஞ்ஜெய டி சில்வா வந்த வேகத்தில், ரன் ஏதும் எடுக்காமல் அக்சர் படேல் பந்தில் போல்டானார். 20 ஓவர்கள் வரை அந்த அணி 3 விக்கெட்களை இழந்து 116 ரன்கள் குவித்துள்ளது.