INDvsSL: பேட்டிங்கில் மிரட்டத் தயாரான இந்தியா..! இலங்கை பந்துவீச்சு தேர்வு.!
INDvsSL : இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 6 முதல் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. மொத்தம் 45 லீக் போட்டிகளில், இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் 33 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீச்சை செய்கின்றன. இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் சச்சினின் 2 முக்கிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
அதே போல இலங்கை அணி 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் இந்திய அணி 98 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
11 போட்டிகளில் முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. ஒரு போட்டி மட்டும் சமமாக முடிந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் கடைசியாக கொழும்புவில் விளையாடிய ஆசியக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி ஐந்து ஆட்டங்களில் இந்தியா ஐந்து முறை இலங்கையை வீழ்த்தியுள்ளது.
மேலும், இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் வென்றால், முதல் அணியாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பெறும். இதனால் ரசிகர்கள் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா:
ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
இலங்கை:
பாத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ்(W/C), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த, மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க