#INDvsSL: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்.
இந்தியா – இலங்கை இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று குவஹாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை (பிளேயிங் லெவன்I): பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.