#INDvsSA:பந்து வீச்சில் மிரட்டிய அவேஷ்,சாஹல்;82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார்.
அதே சமயம்,அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்த இஷான் 3 பவுண்டரி,1 சிக்சர் என 27 ரன்கள் எடுத்த நிலையில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர்,களம் கண்ட அணியின் கேப்டன் ரிசப் பன்ட் 17 ரன்கள் எடுத்திருந்தபோது,மகாராஜ் பந்து வீச்சில் பிரிட்டோரியசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து,ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணிக்கு மேலும் ரன்களை குவித்தனர்.அந்த வகையில், ஹர்திக் 3 பவுண்டரி,3 சிக்சர் என 46 ரன்கள் எடுத்தார்.மறுபுறம் கார்த்திக் 9 பவுண்டரி,இரு சிக்சர் என 55 ரன்கள் எடுத்திருந்தார்.ஆனால்,ஹர்திக் ஷம்சியிடமும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்த நிலையில்,அடுத்த சில நிமிடங்களில் கார்த்திக்கும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
.@DineshKarthik put on an impressive show with the bat & bagged the Player of the Match award as #TeamIndia beat South Africa in Rajkot. ???? ????
Scorecard ▶️ https://t.co/9Mx4DQmACq #INDvSA | @Paytm pic.twitter.com/RwIBD2OP3p
— BCCI (@BCCI) June 17, 2022
இறுதியில்,20 ஓவர் முடிவில் இந்திய அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக லுங்கி என்கிடி இரு விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து,வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க,இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆல் அவுட் ஆகி 87 ரன்கள் மேட்டுமே எடுத்தனர்.இதனால்,இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும்,யுஸ்வேந்திர சாஹல் 2 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் தோற்றால் தொடரை இழந்து விட நேரிடும் என்பதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது வெற்றியை இந்தியா தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில்,இந்திய அணி வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.இதனைத் தொடர்ந்து,நாளை இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நடைபெறவுள்ளது.