முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில், தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே, அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
கேஎல்ராகுல் விலகியதால்,, இந்திய அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மறுபக்கம், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 5 போட்டிகளை கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் சூழல் உள்ளது. இதனால், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ள இந்திய அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. அதன்படி, இன்றைய போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…