தென்னாபிரிக்கா அணியும் , இந்திய அணியும் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நேற்று 2-வது டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அணியை வெற்றி பெற செய்தார்.
இப்போட்டியில் கோலி 52 பந்தில் 72 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. மேலும் சர்வேதேச டி20 போட்டியில் மொஹாலி மைதானத்தில் அதிகபட்சமாக அடித்த ரன் பட்டியலில் மீண்டும் கோலி இடம் பிடித்து உள்ளார்.
இதற்கு முன் கோலி 2016 -ம் நடைபெற்ற சர்வேதேச டி20 போட்டியில் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அதன் பின்னர் மீண்டும் 72 ரன்கள் அடித்து அந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
கோலி-82* (2016)
குப்தில் – 80 (2016)
கோலி – 72 * (2019)
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…