INDvsSA Toss [Image source : X/@Entertales]
INDvsSA: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 37-ஆவது லீக் போட்டியில், இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதுகிறது. அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத இந்தியா, ஒரு முறை தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.
இந்த பரபரப்பான போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, 14 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் முடிவுகள் இல்லாமலேயே முடிந்துள்ளது.
ஏற்கனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் அரையிறுதி சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறுகிற லீக் போட்டியிலும் மோதுகிறது. எனவே இந்த போட்டியானது மிகவும் பரபரப்பாக இருக்கும்.
ஏனென்றால் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். இதனால் இப்போட்டியில் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி
ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…