உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகம் எதிர்பார்ப்புக்கு போட்டிகளில் ஒன்று தான் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாகும். இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில், இந்த போட்டியைக் காண லட்சக்கணக்காண ரசிகர்கள் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அகமதாபாத் மொத்தமும் பரபரப்பாக காணப்படுகிறது.
இரண்டு அணிகளும் உலகக்கோப்பை போட்டியில் தங்களது முதல் 3 போட்டிகளையும் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த மூன்றாவது போட்டியில் களமிறங்குகின்றன. ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய 7 போட்டிகளில் இந்தியாவே வென்றுள்ளது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டி எப்போதும் தனித்துவமானது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
இந்தியா,பாகிஸ்தான் மோதல்…! ஹாட்ரிக் வெற்றியை பெறுவது யார்..?
இதனால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது, அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மிகவும் இந்த நாளுக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். இரு அணிகளிலும், இந்தப் போட்டியை ஒரு மறக்க முடியாத போட்டியாக மாற்றும் அளவிற்கு திறன் கொண்ட வீரர்களை கொண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், இப்போட்டிக்கு பாதுகாப்பும் மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அந்தவகையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி, குஜராத் முழுவதும் 6000க்கும் மேற்பட்ட காவலர்கள், தேசிய பாதுகாப்பு படை, பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக முக்கியான போட்டி என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நரேந்திர மோடி மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களுக்காக பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…