INDvsNZ T20: டக்வர்த் லூயிஸ் முறையில் போட்டி சமன்! தொடரை வென்ற இந்திய அணி.!
இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் மழையால் டி.எல்.எஸ்(DLS) முறைப்படி போட்டி சமனில் முடிந்தது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட் எடுத்து அசத்தினர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன்(10), ரிஷப் பந்த்(11) ரன்களுக்கு ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 13 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஷ்ரேயஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ஓவர்களில் 75/4 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது. இந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹர்டிக் பாண்டியா 30* ரன்களுடனும், தீபக் ஹூடா 9* ரன்னுடனும் களத்தில் நின்றனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்களும், ஆடம் மில்னே மற்றும் இஷ் சொதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிறகு ஆட்டம் டக்வர்த் லூயிஸ் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது. இதன்படி போட்டி சமநிலையில் முடிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆட்டநாயகனாக சிராஜும், தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டனர்.