இந்தியா-நியூசிலாந்து டி-20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன்(10), ரிஷப் பந்த்(11) ரன்களுக்கு ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 13 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஷ்ரேயஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 9 ஓவர்களில் 75/4 ரன்கள் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஹர்டிக் பாண்டியா 30* ரன்களுடனும், தீபக் ஹூடா 9* ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணிக்கு வெற்றி பெற இன்னும் 66 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்படுகிறது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்களும், ஆடம் மில்னே மற்றும் இஷ் சொதி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…