INDvsNZ ODI SERIES: 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி!

Default Image

இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இந்திய அணி ஏற்கனவே தொடரை 2-0 என வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா(101 ரன்கள்) மற்றும் கில்(112 ரன்கள்) ஆகியோரின் அதிரடி சதம் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் அரைசதம்( 54* ரன்கள்) உதவியுடன் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.

386 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் பின் ஆலன் டக் அவுட் ஆக, டெவான் கான்வே சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 138 ரன்களில் உம்ரன் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு இறங்கியவர்களில் ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என வாஷ் செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்