INDvsNZ ODI: இந்திய பவுலர்கள் அபாரம்! நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்.!
இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று ராய்ப்பூரில் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது, இந்திய பௌலர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தனர்.
அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் (36 ரன்கள்), மிட்சேல் சாண்ட்னர்(27 ரன்கள்) மற்றும் மைக்கேல் ப்ரேஸ்வெல்(22 ரன்கள்) குவிக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில், ஷமி 3 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஹர்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.