நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்திலே புவனேஷ்குமார் ஓவரில் போல்ட் ஆனார்.
அடுத்து இறங்கிய மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார். இருவரும் கூட்டணியில் 110 ரன்கள் சேர்ந்தது. அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசி 63 ரன்கள் குவித்து 14-வது ஓவரில் 2-வது பந்தில் அஸ்வின் வீசிய சூழலில் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதே ஓவரில் 5-வது பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் சிறப்பாக விளையாடிய 42 பந்தில் 4 சிக்ஸர் , 3 பவுண்டரி என மொத்தம் 70 ரன்கள் விளாசி ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த டிம் சீஃபர்ட் 12, ரச்சின் ரவீந்திரன் 7 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்குமார், அஸ்வின் தலா 2, தீபக் சாஹர், சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…