INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!
28 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பாக குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, வருண் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கடந்த முறை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி இரண்டாவது இன்னிங்சில் தொடர் விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதே தவறை மீண்டும் செய்துவிட கூடாது என பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
ஆனால் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. ஆரம்பத்தில் அதிரடியாக ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்துள்ளது நியூசிலாந்து அணி. தற்போது வரையில் 26 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் (15 ரன்கள்) 8வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் lbw விக்கெட் ஆனார். 11வது ஓவரில் குலதீப் பந்துவீச்சில் ரச்சன் ரவீந்திரா (37 ரன்கள்) போல்ட்டாகி அவுட் ஆகினார். அடுத்து 13வது ஓவரில் கேன் வில்லியம்சன் (11 ரன்கள்) குலதீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அடுத்து டாம் லதாம் (14 ரன்கள்) 24வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் lbw விக்கெட் ஆனார்.
தற்போது வரையில் 28 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது நியூசிலாந்து அணி. அடுத்தடுத்த விக்கெட்டுகளை நோக்கி பந்துவீசி வருகிறது இந்திய அணி.