இந்தியாவுக்கு எதிராக களமிரங்கும் நியூசி., டெஸ்ட் அணி அறிவிப்பு.!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது.தற்போது இரு அணிக்களுக்கும் எதிரான டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மற்றும் இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல் ஆகியோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்கது காயம் காரணமாக விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமிசனுடன் இந்திய வம்சாவளி வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:-
வில்லியம்சன் (கேப்டன்), புளுன்டெல்,டாம் லாதம், ரோஸ் டெய்லர், வாக்னர், கிராண்ட்ஹோம், நிக்கோலஸ், வாட்லிங், போல்ட், ஜேமிசன், அஜாஸ்படேல், டேரியல் மிச்செல், சவுத்தி.