இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு.
இந்தியா – இலங்கை இடையே மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர நடைபெற்று வருகிறது. கடந்த 10-ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா அணி முதலில் பந்துவீச உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல்-க்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை (பிளேயிங் லெவன்): குசல் மெண்டிஸ் (w), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (w), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…