அயர்லாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளின் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. நீண்ட மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய கேப்டன் பும்ரா முதல் போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி பல சாதனைகளை படைத்து சூப்பரான கம்பேக் கொடுத்திருந்தார்.
எனவே, அவர் அயலர்ந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் நல்ல பார்மில் இருப்பதால் இன்று நடைபெறவுள்ள போட்டியிலும் அவர் அருமையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் பும்ராவை தவிர பிரசித் கிருஷ்ணா (2), ரவி பிஷ்னோய் (2), அர்ஷ்தீப் சிங் (1) ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்கள்.
ஆனால், இதில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்து வீசி 35 ரன்களை வாரி வழங்கி இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது போட்டியில் அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக அவேஷ் கான் அல்லது முகேஷ் குமார் அணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
மேலும், இந்தியா தனது பேட்டிங் வரிசையில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை. இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் இதுவரை டி20 போட்டிகளில் இல்லாத அளவிற்கு ஆறு இடது கை வீரர்களை களமிறக்கியது.
இந்தியா : ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (c), அர்ஷ்தீப் சிங்/அவேஷ் கான் / முகேஷ் குமார்
அயலர்ந்து : பால் ஸ்டிர்லிங் (c), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர் (WK), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் வைட்
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…