இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை சேர்த்து ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறியாது. அதன் பின் களமிறங்கிய ஜோ ரூட்டும், பென் ஃபோக்ஸும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க தொடங்கினர். இவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது.
இதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயரவும் தொடங்கியது. இருவரது கூட்டணியில் இங்கிலாந்து அணி 225 ரன்களை எட்டிய போது நன்றாக விளையாடிய பென் ஃபோக்ஸ் 47 ரங்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் தொடர்ந்து அடுத்த விக்கெட்டும் விழுந்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி ராபின்சன், ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
மறுமுனையில் ஜோ ரூட் மமிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இறுதியாக, முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட்டை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், ஜோ ரூட் 226 பந்துகளுக்கு 106 ரன்களும், ஒல்லி ராபின்சன் 60 பந்துகளுக்கு 31 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…