#INDvsENG : காலமான முன்னாள் கிரிக்கெட் வீரரின் நினைவாக ..! கையில் கருப்பு பேண்ட் ..!
இந்தியா, இங்கிலாந்து அணி இடையிலான நடந்து கொண்டிருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியின், இன்றைய 3வது நாளில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் நினைவாக கையில் இவ்வாறு கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்று பிசிசிஐ X சமூக தளத்தில் தெரிவித்துள்ளது.
#INDvsENG : அஸ்வினுக்கு பதில் இவரா..? எம்சிசியின் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா..?
தத்தாஜிராவ் கெய்க்வாட், இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்தவர் ஆவார். எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்ட போது தத்தாஜிராவ் கெய்க்வாட் அந்த அணியின் முதல் கேப்டனாக நியமகிக்கபட்டார்.
தத்தாஜிராவ் கெய்க்வாட் அவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை 1952-1961 வரை இருந்தது. அதில் இடைப்பட்ட வருடங்களில் கெய்க்வாட் 11 டெஸ்டி போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். கெய்க்வாட் ஒரு மிகசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். மேலும், அவர் விளையாடும் பொழுது களத்தில் ஒரு அற்புதமான பீல்டராகவும் செயல்படுவார்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கெய்க்வாட் அன்னாரது 95 வயதில் குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அந்த கிரிக்கெட் ஜாம்பவானினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தற்போது இங்கிலாந்து அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.