INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது BCCI ..! இதுதான் மாற்றமா..?
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரானது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இந்த 4 போட்டியில் இந்தியா அணி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த தொடரின் 5-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வருகிற மார்ச்-7ம் தேதி தரமசாலாவில் தொடங்கவுள்ளது.
Read More :- என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்.. – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா.
இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் இரு அணிகளும் இருந்து வருகிறது. இந்த நிலையில் 5-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. 4-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா தற்போது 5-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன், பிசிசிஐ அறிவித்தது போல் இந்திய அணியின் வீரரான, கே.எல்.ராகுல் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை காரணமாக லண்டன் சென்றுள்ளதால். அவரும் அணியில் இடம்பெறவில்லை.
Read More :- BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!
5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
இதில் எந்த 11 இந்திய வீரர்கள், 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறார்கள் என்பதை வருகிற மார்ச்-7ம் தேதி பார்ப்போம்.