#INDvsENG : அறிமுக போட்டியில் இங்கிலாந்தை அளரவிட்ட ஆகாஷ் தீப் ..!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் இன்று அந்த டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
Read More :- #NZvsAUS : டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது ..!
இந்திய அணியில் பும்ரா போன்ற நட்சத்திர வீரர் இல்லாத இந்த டெஸ்ட் போட்டியில், அவரது இடத்தை யார் பூர்த்தி செய்வார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. தற்போது, இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சளரான ஆகாஷ் தீப் அந்த கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்துள்ளார். ஆகாஷ் தீப்பிற்கு இந்த டெஸ்ட் போட்டி அவரது சர்வேதச டெஸ்ட் போட்டியில் அறிமுக போட்டியாகும்.
பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி இவரது வேக பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது. இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை ஆகாஷ் தீப் கதிகலங்க வைத்தார் . இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரின் (Top Order) முதல் 3 பேட்ஸ்மேன்களான சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப் என மூவரையும் முதல் 12 ஓவருக்குள் விக்கெட் எடுத்து பெவிலியன் அனுப்பி வைத்தார்.
Read More :- வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!
இதற்கு முன், 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வலு சேர்த்தார். மேலும், மற்றும் ஒரு இளம் வீரரான ஜெய்ஸ்வால் அவரது பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு வலு சேர்த்தார். தற்போது ஆகாஷ் தீப்பும் அவர் அறிமுகமான இந்த முதல் போட்டியில் இந்திய அணிக்கு வலு சேர்த்துள்ளார். இது மாதிரியான சிறப்பான இளம் இந்திய வீரர்களின் அறிமுகம், இந்திய அணியின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு உறுதுணையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.