இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நாளை டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கிவிடும்.
#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!
நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும், மாறாக இங்கிலாந்து அணி இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கும். அதன் பின் இறுதியாக நடைபெறும் 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுவார்கள்.
நாளை தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்கள். மேலும், பும்ராவிற்கும் இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறுவார். மேலும், ஜெய்ஸ்வால், கில் மற்றும சர்ஃபராஸ் கான் நல்ல பார்மில் உள்ளனர்.
இதனால் இந்த போட்டியை பும்ரா, கோலி போன்ற பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களின் திறமையாலும், ரோஹித் மற்றும் ஜடேஜாவின் அனுபவத்தாலும் இந்திய அணி இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை டாஸ் போடும் போது தான் இந்திய அணியில் இடம்பெற போகும் 11 வீரர்கள் யார் என்பது தெரிய வரும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…