INDvsBAN TestSeries: சுப்மன் கில் அரைசதம்! இந்தியா 394 ரன்கள் முன்னிலை.!

Default Image

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 140/1 ரன்கள் குவிப்பு.

இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் 70 ரன்கள் குவித்தனர். ராகுல் 23 ரன்களுக்கு கலீத் அஹ்மது பந்தில் ஆட்டமிழக்க புஜாராவுடன் சேர்ந்து சுப்மன் கில் அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.

3-வது நாள் தேனிர் இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 80 ரன்களும், புஜாரா 33 ரன்களும் குவித்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி 394 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்