இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசஅணி 272/6 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் சாகிர் ஹசன் இருவரும் அரைசதம் கடந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தனர். 67 ரன்கள் குவித்த நிலையில் நஜ்முல் ஹூசைன், உமேஷ் யாதவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய யாசிர் அலி 5 ரன்னுக்கு அக்சர் பட்டேல் பந்தில் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, சாகிர் ஹசன் நிலைத்து நின்று ஆடி 100 ரன்கள் அடித்தார். அதன்பின் அஸ்வின் பந்தில் சாகிர் ஹசன் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முஸ்ஃபிக்கர் ரஹீம் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஷகிப் அல் ஹசன் 40* ரன்களுடன் விளையாடி வருகிறார்.
4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசஅணி 6 விக்கெட்களை இழந்து 272 ரன்கள் குவித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் 40* ரன்களும், மெஹதி ஹசன் 9* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இன்னும் ஒருநாளே மீதமுள்ள நிலையில் வங்கதேச அணிக்கு வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணி, வெற்றி பெற இன்னும் 4 விக்கெட்களை தேவைப்படுகிறது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…