INDvsBAN TESTSERIES: பந்த், ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம்! இந்தியா 200 ரன்களைக் கடந்தது.!
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் தேனீர் இடைவேளை முடிவில் 226/4 ரன்கள் குவிப்பு.
நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி உணவு இடைவேளை முடிவில் 86/3 ரன்கள் குவித்திருந்தது.
உணவு இடைவேளைக்குப்பின் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் விராட் கோலி 24 ரன்களுக்கு டஸ்கின் அஹ்மது விடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புடன் விளையாடி வருகிறது.
ரிஷப் பந்த், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் அரைசதம் கடந்து 86 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 58 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி, தேனீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேச அணியை விட இந்தியா 1 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.