இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 133/8 ரன்கள் குவிப்பு.
நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட்டாக யாசிர் அலி 4 ரன்களுக்கு உமேஷ் யாதவின் பந்தில் போல்டானார்.
அதன்பிறகு சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்களை இழந்துவந்தது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்துள்ளது. எபாடட் ஹூசைன் 13 ரன்களும், மெஹதி ஹசன் 16 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணியை விட, வங்கதேச அணி 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹிம் 28 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும், சாகிர் ஹசன் 20 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சிராஜ் 3 விக்கெட்களும், வீழ்த்தினர்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…