INDvsBAN TESTSERIES: இந்தியா 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் .!
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் உணவு இடைவேளை முடிவில் 86/3 ரன்கள் குவிப்பு.
நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், உனட்கட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் குவித்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய 2-வது நாளில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர்களான சுப்மன் கில்(20) மற்றும் கே.எல். ராகுல்(10) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, முதல் போட்டியில் சதமடித்த புஜாரா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்தியா முதல் இன்னிங்கில் உணவு இடைவேளை முடிவில் 86/3 ரன்கள் குவித்துள்ளது.
விராட் கோலி 18 ரன்களும், ரிஷப் பந்த் 12 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். வங்கதேச அணி தரப்பில், டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.