INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, 3-வது நாள் உணவு இடைவேளை முடிவில் 71/4 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 2- வது நாள் முடிவில் 7 ரன்கள் குவிந்திருந்தது. இன்று மூன்றாவது நாளில் தொடங்கியவுடன் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வருகிறது.
உணவு இடைவேளை முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்துள்ளது. சாகிர் ஹசன் மட்டும் ஓரளவு நிலைத்து 37* ரன்களுடன் விளையாடி வருகிறார். இந்திய அணி தரப்பில் அஸ்வின், உனட்கட், சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இந்தியாவை விட வங்கதேச அணி, இன்னும் 16 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.