INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி நிதான ஆட்டம்! 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.!
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது.
இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது வரை வங்கதேச அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது. மொமினுல் ஹக் 23* ரன்கள், முஷ்பிகுர் ரஹீம் 7* ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்திய வீரர்களான அஸ்வின், உனட்கட், மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.