இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி தேனீர் இடைவேளையின் போது 184/5 ரன்கள் குவிப்பு.
இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில் முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மொமினுல் ஹக், தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
லிட்டன் தாஸ், மொமினுல் ஹக் உடன் ஜோடி சேர்ந்து 42 ரன்கள் குவித்தனர். லிட்டன் தாஸ் 25 ரன்களில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். தேனீர் இடைவேளை வரை அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்துள்ளது. மொமினுல் ஹக் 65* ரன்களும், மெஹதி ஹசன் 4* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் உனட்கட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…