இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேசஅணி 119/0 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி கில் மற்றும் புஜாரா சதத்துடன் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், புஜாரா 102* ரன்களும் குவித்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்திருந்தது. தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணி, தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதமடிக்க உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் 64 ரன்களும், சாகிர் ஹசன் 55 ரன்களும் குவித்து விளையாடி வருகின்றனர். வங்கதேச அணிக்கு இன்னும் வெற்றி பெற 394 ரன்கள் தேவைப்படுகிறது.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…