INDvsBAN : லீவுலாம் முடிஞ்சது..! சென்னை வந்தடைந்தனர் ரோஹித் மற்றும் கோலி!
வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
சென்னை : வங்கதேச அணி வரும் செப்டம்பர்-19 ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக வரும் செப்-19 ம் தேதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது.
இந்த முதல் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று இரவு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் சென்னை வந்தடைந்துள்ளனர்.
இருவரும் கடைசியாக டி20 உலகக்கோப்பையில் விளையாடியிருந்தனர். மேலும், டி20 கோப்பையை வென்ற பிறகு சர்வேதச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர். அதனை தொடர்ந்து இருவருக்கும் துலிப் ட்ராபியிலும் பிசிசிஐ விடுப்பு அறிவித்திருந்தது.
இதனால், இருவரது ரசிகர்களும் இவர்களை எப்போது மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் பாப்போம் என ஆவலாக காத்திருந்தனர். இந்த நிலையில் தான் விடுப்பு முடிந்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
VIDEO | Team India captain Rohit Sharma (@ImRo45) arrived in #Chennai late last night ahead of the Test match against Bangladesh.
The two-match Test series between India and Bangladesh will begin on September 19 in Chennai. The second Test will be played in Kanpur from… pic.twitter.com/if7A87Eb7f
— Press Trust of India (@PTI_News) September 13, 2024
மேலும், இருவரும் இந்த டெஸ்ட் போட்டிகளை தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு தேவையான இடைவெளி என்பது கிடைத்துள்ளது. தற்போது ஹோட்டலில் தங்கி இருக்கும் இருவரும் இந்த முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுதற்கு முன் இந்திய அணியின் கேம்பில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Virat Kohli has arrived in Chennai. 🐐pic.twitter.com/lIjdk3em2p
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 13, 2024
அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதி போட்டியானது நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி கலந்து கொள்வதற்கு டெஸ்ட் அணி தரவரிசையில் முதல் 2 இடம் பிடித்திருக்க வேண்டும். அப்படி அந்த முதலிடத்தை பிடித்து வைத்து கொள்ள உதவுவதற்கு, வங்கதேச அணியுடனான இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு இந்த தொடரில் ரோஹித் மற்றும் கோலி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.