INDvsBAN ODI: மெஹதி ஹசன் சதம்! வங்கதேச அணி 271 ரன்கள் குவிப்பு.!
இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் குவிப்பு.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் 11, லிட்டன் தாஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன் குவிக்க தடுமாறினர். ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற நிலையில் மஹ்முதுல்லா (77 ரன்களும்) மற்றும் மெஹதி ஹசன் (100* ரன்களும்) குவித்து வங்கதேசத்திற்கு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.
இதனால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் உம்ரன் மாலிக் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.