INDvsBAN ODI: அரைசதமடித்தார் இஷான் கிஷன்.!
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியா,முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 3 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் அரைசதம் அடித்துள்ளார்.
15 ஓவர் முடிவில் இந்தியா 85/1 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 60 ரன்களும், கோலி 16 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.