INDvsBAN ODI: இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள்.!
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இஷான், கோலி அதிரடியால் இந்தியா 409 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி, இஷான் கிஷன் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 290ரன்கள் குவித்தது.
தொடர்ந்து அதிரடியைக் காட்டிய இஷான் கிஷன் அதிவேகமாக 126பந்துகளில் 200 ரன்களைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவரைத்தொடர்ந்து விராட் கோலியும் சதமடித்தார். அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
வாஷிங்டன் சுந்தர்(37), அக்சர் பட்டேல்(20) தவிர அனைவரும் ஒற்றை இலக்கில் அவுட் ஆகி திரும்பினர். முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 409ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 210ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் குவித்தனர். வங்கதேச அணி தரப்பில் எபடோட் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.