INDvsBAN ODI: டாஸ் வென்று வங்கதேசம் பௌலிங் தேர்வு.!
இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்தியா, இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, காயத்தால் விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை வகிக்கிறார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுள்ள நிலையில் வங்கதேச அணியும், வாஷ் அவுட் ஆகாமல் இருக்க வெல்லவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இன்று களமிறங்குகிறது. டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: ஷிகர் தவான், இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(W/C), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
வங்கதேச அணி: அனாமுல் ஹக், லிட்டன் தாஸ்(C), யாசிர் அலி, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபடோட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது