INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

இன்று நடைபெற்ற 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இளம் வீரர்களான கில் மற்றும் பண்ட் சதம் விளாசி அசத்தினார்கள்.

INDvsBAN

சென்னை : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் இந்திய அணி பேட்டிங்கை பொறுத்த வரையில் தொடக்கத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கில் இருவரும் இணைந்து பலமான கூட்டணியை தொடர்ந்தனர். இதனால், இந்திய அணி மேலும் வலுவான முன்னிலையை பெற்றது.

சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினார்கள். இதனால், வங்கதேச பவுலர்களுக்கு மிகவும் சவாலாக இருவரின் கூட்டணி அமைந்தது. இந்த நிலையில், துரதிஷ்டவசமாக பண்ட் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் கே.எல்.ராகுல், கில்லுடன் இணைந்து விளையாட தொடங்கினார்.

ஆனால், அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2-வது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். அப்போது கில் 119* ரன்களுடன், கே.எல்.ராகுல் 22* ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மேலும், இந்திய அணி 514 ரன்கள் முன்னிலைப் பெற்று இருந்தது.

மேலும், 515 என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி பேட்டிங் களமிறங்கியது. மீதம் இருக்கும் இரண்டரை நாளில் வங்கதேச அணி இந்த இலக்கை தட்டி தட்டி விளையாடினால் கூட எட்டிவிட முடியும். ஆனாலும், இந்திய அணியின் பவுலிங்கை நம்பியே பேட்டிங்கை டிக்ளேர் செய்திருக்கும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் இந்திய அணிக்கு சவாலாக மாறத்தொடங்கினார்கள். இருவருக்கும் இடையே ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் உருவாக தொடங்கியது. அந்த சமயம் துரதிஷ்டவசமாக ஜாகிர் ஹசன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வங்கதேச ரசிகியர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தத் தொடக்க வீரரான ஷதாம் இஸ்லாம் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருவரைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம், மொமினுல் ஹக் இருவரும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற வங்கதேச அணி சரிவை நோக்கி நகர்ந்தது. ஆனால், ஒரு முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுமுனையில் வங்கதேச அணியின் கேப்டனான சாண்டோ நிலைத்து விளையாடி 51* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

அவருடன் ஷாகிப் அல் ஹசன் 5* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். சரியாக 37. 2 ஓவர்கள் கடந்த நிலையில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் 3-ஆம் நாள் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்து விட்டனர். நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் இந்த் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் தற்போதையே நிலையைப் பார்த்தால் இரு அணிகளும் சமமான நிலையில் இருந்து வருகின்றனர். வங்கதேச அணிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது, நாளைய நாள் விக்கெட்டுகள் அதிகம் இழக்காமல் தட்டி தட்டி விளையாடினால் கடைசி நாள் வங்கதேச அணி போட்டியை வெல்வதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது.

அதே நேரம் இந்திய அணி நாளைய 4-ஆம் நாள் ஆட்டத்தில், முடிந்த அளவிற்கு விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். இன்னும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் இந்திய அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்