INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?
நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு சற்று தாமதமாகலாம் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த ஈரப்பதத்தின் காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. அதன் பிறகு இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
அதன்படி வங்கதேச அணியும் பேட்டிங் களமிறங்கியது. தொடக்கத்தில் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு வங்கதேச அணி தடுமாறினாலும். அதன் பிறகு களத்தில் இருந்த மொமினுல் ஹக் மற்றும் ஷாண்டோ இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திநார்கள்.
இதனால், போட்டி இருதரப்பிலும் சவாலாக அமைந்ததோடு, அந்த ஷெசனும் சமநிலையில் இருந்தது அப்போது திடீரென மழைக் குறுக்கிட்டதால். முதல் சேஷன் முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த 2-வது செஷனில் வங்கதேச அணி ஒரு விக்கெட்டை இழந்தது. ஆனாலும், அதற்கு நிகராக ரன்களையும் சேர்த்தது.
போட்டி 35 ஓவர்களைக் கடந்த பின் மீண்டும் மழைக் குறுக்கிட்டதால் நேற்றைய நாள் அத்துடன் முடிக்கப்பட்டது. அப்போது வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்க வேண்டிய நிலையில் காலை முதல் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் மழை பெய்து வருகிறது.
இதனால் போட்டி தொடங்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கும் என போட்டியின் நடுவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி, அதனால் இந்த போட்டி நடைபெற வேண்டுமென்ற இரு அணிகளும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.