INDvsBAN : மழையால் முடிந்த முதல் செஷன்! வலுவான நிலையில் வங்கதேச அணி?
இந்தியா மற்றும் வங்கதேச அணி இடையே நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டி யில் வங்கதேச அணி 2 விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது.
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரரான சாகிர் ஹாசன் 24 பந்துகள் விளையாடி ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆகாஷ் தீப்பிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதனால் தொடக்கம் இந்திய அணியின் பக்கம் சாய்ந்தது. அவரைத் தொடர்ந்து இஸ்லாமும் 24 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி வலுவான தொடக்கத்தை அமைத்தது. ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் மற்றும் ஷாண்டோம் இருவரும் இணைந்து தட்டி தட்டி பொறுமையாக விளையாடி வந்தனர்.
இதுவரை, இருவரும் தனித்தனியே 48 பந்துகள் விளையாடி மொமினுல் ஹக் 17 ரன்களும், ஷாண்டோ 28 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே பிச்சும் அமைந்திருந்தது.
சரியாக 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்திருந்த போது மைதானத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால், போட்டி நிறுத்தப்பட்டு, முதல் செஷன் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணியும் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொண்டு வருகின்றனர்.
இதனால் முதல் செஷன் இரண்டு அணிக்கும் சாதகமாக இல்லாமல் சமமாக முடிந்துள்ளது. மேலும், மழை நின்ற பிறகு மீண்டும் இன்றைய நாளின் அடுத்த சேஷன் தொடங்கும். அடுத்த செஷனில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதனை பொறுத்து இருந்து பார்க்கலாம்.