INDvsBAN : தாமதன 2-வது டெஸ்ட் போட்டி! பவுலிங் தேர்வு செய்த இந்திய அணி!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கவுள்ளது.
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்த்தில் முதலாவதாகடெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டி, மைதானத்தில் உள்ள ஈரப்பதம் காரணமாக இன்னுமும் தொடங்காமல் இருக்கிறது.
ஏற்கனவே, கான்பூரில் இன்று மழை பொலிவு இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தனர். ஆனால், தற்போது மழை பொலிவு இல்லாவிட்டாலும் ஏற்கனவே பெய்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் போட்டியைத் தொடங்க தாமதமாகி இருக்கிறது. இதனால், மைதானத்தில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கிய பிறகே இந்த போட்டியானது தொடங்கப்பட்டது.
அதன்படி, போட்டியின் டாஸ் 10 மணிக்கு போடப்பட்டது, அதில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு ரோஹித் சர்மா பேசிய போது, ‘அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும், அதே அணியுடன் நாங்கள் களமிறங்கிறோம்’ எனவும் தெரிவித்தார். இதனால், 3 வேக பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது.
அதே நேரம் வங்கதேச அணியில் இரண்டு புதிய மாற்றங்களைச் செய்துள்ளதாக வங்கதேச கேப்டன் ஷாண்டோ தெரிவித்தார். மேலும், இந்திய அணி பந்து வீச உள்ளதால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதில் ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அணி வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
வங்கதேச அணி வீரர்கள் :
ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.