IndvsAus1stTest: இந்திய அணி 400 ரன்களில் ஆட்டமிழந்தது..!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்ஷர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது.