INDvsAUS ODI: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் .!
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் தொடரை முடிவு செய்யும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிப்பதால் இன்றைய போட்டி தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக கருதப்படுகிறது.
இந்திய அணியைப்பொறுத்தவரை பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர் மற்றும் பவுலிங்கில் ஷமி ,சிராஜ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெகுளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய போட்டியில் இந்தியா, எந்த மாற்றமும் இல்லாமல் 2-வது போட்டியில் இருந்த அதே அணியுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மார்ஷ் மற்றும் ஹெட் நல்ல பார்மில் இருக்கின்றனர். பவுலிங்கில் ஸ்டார்க் மிரட்டி வருகிறார். இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்,
இந்திய அணி: ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (W), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(C), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி(W), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சான் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா