INDvsAUSTest Live : கோப்பையை வென்றது இந்திய அணி ..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி..!

Default Image

பார்டர்-கவாஸ்கர் கோப்பை நாயகர்கள்:

Image

நான்காவது போட்டி ட்ரா:

ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி 175/2 என்ற கணக்கில் இருந்த போது இரு அணி கேப்டன்களும் ஒரு மனதாக “ட்ரா” செய்ய முடிவு எடுத்தனர். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

Image

“நெர்வோஸ் நயன்ட்டிஸ்”  கிளீன் பவுல்ட் :

ஆஸ்திரேலிய அணி வீர டிராவிஸ் ஹெட் 90 (163) வெறும் 10 ரன் வித்தியாசத்தில் தனது சதத்தினை தவறவிட்டுள்ளார்.அக்சர் படேல் வீசிய பந்தில் கிளீன் பவுல்ட் ஆனார்.

ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்:

ஐம்பது ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்துள்ளது.

உணவு இடைவேளை:

Image

ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் தற்போது முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து 18 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

மேத்யூ குஹ்னெமன் அவுட் :

Image

அஸ்வின் வீசிய பந்தில் மேத்யூ குஹ்னெமன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களில் ஆடி வருகிறது.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடக்கம்:

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 91 ரன்கள் முன்னிலையுடன், நேற்று 571 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது.

5th day test

88 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடி வருகிறது.

நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது:

Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விராட் கோலி  நிறைவு செய்தார்.இந்திய அணி ஆல்-ரவுண்டர்  அக்சர் படேல் 50 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

விராட் கோலி அவுட்:

இரட்டை சதம் அடிப்பார் என்று எண்ணப்பட்ட நிலையில் விராட் கோலி 186(364) மர்பி பந்துவீச்சில் லபுஸ்சாக்னே வசம் பிடிபட்டார். இந்தியா அதன் முதல் இன்னிங்க்ஸை 91 ரன் முன்னிலையில் நிறைவு செய்தது.

Image

ஸ்டார்க் ஸ்ட்ரைக்ஸ்:

அதிரடியாக ஆடி வந்த அக்சர் படேல் 79(113) மிச்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார். இந்தியா 173 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 559 ரன்கள் எடுத்துள்ளது.

அக்சர் படேல் 50*

Image

இந்திய அணி ஆல்-ரவுண்டர்  அக்சர் படேல் 50 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி 545-5 என்ற ரன் கணக்கில் 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 6 விக்கெட் பார்ட்னெர்ஷிப்பிற்கு விராட் மற்றும் அக்சர் இனைந்து 150 ரன்கள் அடித்துள்ளனர். விராட் கோலி 172* மற்றும் அக்சர் படேல் 788 என்று களத்திலுள்ளனர்.

விராட் கோலி 100*

Image

கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் அவர் அடித்த சதமே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை  டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் தற்பொழுது அவரின் 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தையும் அவர் பூர்த்திசெய்துள்ளார். இந்திய அணி தற்பொழுது 400 ரன்களை எட்டியுள்ளது.

உணவு இடைவேளை:

Image

இந்திய அணி 131 ஓவர்களில் 362-4 என்ற ரன் கணக்கில் 119 ரன்கள் பின்னடைவில் உள்ளது. விராட் கோலி  88* ஸ்ரீகர் பரத் 25* ரன்களுடன்  களத்திலுள்ளனர். தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

நான்காம் நாள் ஆட்டம் தொடக்கம்:

Image

இந்தியா 100 ரன்கள் பின்னடைவில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 303-3 என்றகணக்கில் ஆடிவருகிறது.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது:

Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மண் கில்கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. நாள்முடிவில் இந்தியா 289/3 என்ற கணக்கில் 191 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

விராட் கோலி 50*:

Image

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 94 ஓவர்களில் இந்திய அணி 271 ரன்கள் அடித்துள்ளது. மேலும்,நான்காயிரம் டெஸ்ட் ரன்களை ஹோம்கிரவுண்டில் பதிவு செய்தார் விராட்.

Image

ஷுப்மண் கில் அவுட்:

Image

அதிரடியக ஆடி வந்த ஷுப்மண் கில் நேத்தன் லயன் பந்துவீச்சில் எல் பி டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 86 ஓவர்களில்  3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.

தேநீர் இடைவேளை:

தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 63 ஓவர்களில்  இரண்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை அடித்துள்ளது. ஷுப்மண் கில் 103* ரன்களுடன் களத்திலுள்ளார்.

Image

ஷுப்மண் கில் 100*:

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மண் கில் 102* (195). இந்நிலையில் புஜாரா 42 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

2023-03-11 02:10 PM

நிதான ஆட்டம் :

puji

ஐம்பது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் குளிர்பான இடைவேளை விடப்பட்டுள்ளது.

ரோ”ஹிட்” மேன் 17000* :

4th Test, Day 3: Rohit Sharma Becomes Sixth Indian Player To Complete 17,000 International Runs On Cricketnmore

4வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 21 ரன்கள் அடித்ததன்  மூலம்  சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 17,000 ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உணவு இடைவேளை முன்:

உணவு இடைவேளை வரை இந்திய அணி 129 ரன்களை குவித்துள்ளது. ஷுப்மண் கில் 65* மற்றும் புஜாரா 22* என்று களத்திலுள்ளனர்.

Image

ஷுப்மண் கில் 50*:

gil (1)

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மண் கில் அரைசதம் விளாசினார். இந்திய 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித்&கில் 50* பார்ட்னெர்ஷிப் :

rogil

மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் களத்திலுள்ளனர். தற்பொழுது குணேமண் வீசிய பந்தில் ரோஹித் சர்மா அவுட் ஆனார்.

2023-03-11 10.28 AM

இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது:

Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. முதல் இன்னிங்சில் 480/10 என்ற கணக்கில் முடிந்தது ஆஸ்திரேலியாவின் ஆட்டம். ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே 480 ரன்கள் பின்னிலையில் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களில் 36 ரன்கள்  எடுத்து 444 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

2023-03-10 05:03 PM

ஆஸ்திரேலியா ஆல்-அவுட் :

Image

அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா 167 ஓவர்களில் 480 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

2023-03-10 4:06 PM  

கவாஜா 180:

Image

இரட்டை சதம் அடிப்பார் என்ற கருதப்பட்ட உஸ்மான் கவாஜா 180 (421) அக்சார் படேல் வீசிய முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

2023-03-10 3:05 pm

தேநீர் இடைவேளை:

Image

தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 180* ரன்களுடன் உள்ளார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2023-03-10 2:15 PM

ஆஸ்திரேலியா 400 ரன்கள் குவிப்பு:

Image

143 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் கவாஜா 176* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

2023-03-10 2:00 pm

கேமரூன் கிரீன் சதம் : 

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது முதல் சதத்தை அடித்தார், கேமரூன் கிரீன் 109* (154) ஆஸ்திரேலியா 124 ஓவர் முடிவில் 368 ரன்கள் எடுத்துள்ளது.

Image

2023-03-11 12:25 pm 

உணவு இடைவேளை முன்:

உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 119 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 150* மற்றும் கிரீன்  95* ரன்களுடன் உள்ளனர்.

New Project 2323

கேமரூன் கிரீன் ஐம்பது:

நிதானமான ஆட்டம் மூலம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார் கேமரூன் கிரீன் 52*(70). ஆஸ்திரேலிய அணி 263-4 ரன்களுடன் இரண்டம் நாள் ஆட்டத்தை துவங்கியுள்ளது.

Australia 'hopeful' WA all-rounder Cameron Green fit to bat in first India Test | PerthNow

2023-03-10 09:45 AM

முதல் நாள் ஆட்டம் முடிவு :

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 255/4 என்ற நிலையில் இருந்தது, உஸ்மான் கவாஜா (104* ரன்கள்) மற்றும் கேமரூன் கிரீன் (49* ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2023-03-09 04:58 PM

உஸ்மான் கவாஜா சதம் : 

அட்டகாசமான பேட்டிங்கால் சதம் அடித்து அசத்தினார் உஸ்மான் கவாஜா (103 ரன்கள்). ஆஸ்திரேலிய அணி 254-4 ரன்கள் எடுத்துள்ளது.

Usman Khawaja hits

2023-03-09 04:34 PM

174 ரன்கள் :

ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்துள்ளது. முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2023-03-09 03:19 PM

தேநீர் இடைவேளை வரை :

தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பில் 149 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

Ausbatting148

2023-03-09 02:19 PM

உஸ்மான் கவாஜா அரைசதம் :

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது 22வது அரைசதம் அடித்த நிலையில் 125-2 ரன்கள் குவித்துள்ளது.

22nd half century

2023-03-09 01:30 PM

உணவு இடைவேளை :

உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

lunch break

2023-03-09 11:40 AM

இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தியது இந்தியா:

ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி.

2023-03-09 11:10 AM

டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார் :

Ashwin took the first wicket

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அஸ்வினின் பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜாவின் கேட்ச் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

2023-03-09 10:23 AM

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு :

Australian Team Batting Selection

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு.

2023-03-09 09:06 AM

இரு நாட்டு பிரதமர்கள் வருகை: 

Visit of the Prime Ministers of the two countries

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் வருகை தந்துள்ளனர்.

2023-03-09 08:55 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்