INDvsAUS: ஆஸ்திரேலியாவுக்கு தான் அதிக வாய்ப்பு…இந்தியாவுக்கு இல்லை…ரிக்கி பாண்டிங் கருத்து.!!

Ricky Ponting about World Test Championship final

டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து சமீபத்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ‘தி ஓவல்’ மைதானத்தில் நடைபெறுகிறது.

எனவே, இதை வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு அணிகளுக்கும் வெற்றி  சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஆனால் “தி ஓவல்” மைதானம் இந்திய அணி பிட்ச் போல் இல்லாமல் ஆஸ்திரேலிய மைதானத்தில் இருப்பது போல இருப்பதால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான சூழ்நிலையில் இருப்பதால் இந்திய அணி  இந்த போட்டியில் தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெற்றால் இரண்டு அணிகளுக்கும் போட்டி கடுமையானதாக இருக்கும் என நான் கூறியிருப்பேன். இந்திய அணி 10-15 வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களால் சில சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடிந்தது, அதனால் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்