INDvsAFG
2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 9 வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவுடனான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணியும், வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீச்சை செய்து வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பந்துவீச களமிறங்கியது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் முதலில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள்.
இதன்பிறகு விளையாடிய ரஹ்மத் ஷா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் 14 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஷாஹிதியுடன் இணைந்து விளையாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் அரைசதம் அடித்து அசத்த, ஷாஹிதியும் அரைசதம் கடந்தார்.
ஒருபுறம் நிதானமாக விளையாடிய உமர்சாய் 62 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேற, அவரைத்தொடர்ந்து ஷாஹிதியும் ஆட்டமிழந்தார். பின், முகமது நபி மற்றும் நஜிபுல்லா சத்ரன் விளையாட சத்ரன் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரஷித் கானுடன் இணைந்து விளையாடிய முகமது நபி 19 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுக்க, ரஷித் கானும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் ஜோடி களத்தில் நிற்க, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…