#INDvsAFG: பந்துவீச தயாராகும் இந்தியா.! முதலில் களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான்.!

Published by
செந்தில்குமார்

6 வது நாளாக நடைபெறும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 9 வது லீக் போட்டியானது இன்று நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகிறது.

இந்திய அணியானது தொடரின் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அணிக்கு ரன்கள் ஏதும் எடுக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.

ஆனால் நட்சத்திர வீரர்களான விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதேவேகத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆனால் இதில் இந்திய அணிக்கு இழப்பு என்னவென்றால் சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ஏனென்றால் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதேபோல ஆப்கானிஸ்தான் அணியும் இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 156 ரன்கள் என்ற வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் இந்திய அணியுடன் மோதுகிறது. மேலும் இந்திய அணிக்கு மற்றொரு சாதகமான வாய்ப்பாக இந்த போட்டியானது மும்பையில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

தற்பொழுது போட்டியானது தொடங்கியுள்ளதால், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் விளையாட உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல்-ஹக் ஃபரூக்ஹல்ஹாக் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

22 minutes ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

1 hour ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

1 hour ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

1 hour ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

2 hours ago