T20: INDVNZ:பழித்தீர்க்க ரெடியாகும் நியூசி..பட்டையை கிளப்ப இந்தியா..! இன்று பலபரீச்சை

- இந்தியா- நியுசிலாந்து அணிகள் மோதும் 2 வது டி20- கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.
- பழிதீர்க்க நியூசிலாந்து அணியும் இன்று வெற்றியை ரூசிக்க இந்திய அணியும் பலபரீச்சை நடத்துகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி முதலில் 20 ஒருவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படிமுதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனதுது வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளது.அவ்வாறு 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று 2வது -டி20 போட்டியானது ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், கேப்டன் கோலி ஆகியோர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளனர். அதே போல் பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ராவின் பந்துவீச்சு எதிரணிக்கு கடும் தலைவலியை கொடுக்கும் என்று கிரிக்கெட் விமர்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபக்கத்தில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் இருக்கும் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற மும்முறம் காண்பிக்கும் அந்த அணியில் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் ரன்களை குவிக்க தவற மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியை போல் வெற்றியைத் தொடருமா..?இன்று நாட்டிற்கு சிறப்பான நாள் ஆகையால் அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது