இன்று 2-வது ஒருநாள் போட்டி..! தொடரை கைப்பற்ற நியூசிலாந்து கங்கணம்.! இந்தியா வாழ்வா.!சாவா..???
இன்று இந்திய நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இந்தபோட்டி ஆனது இரு அணிகளுக்கும் முக்கியமானது ஆகும்.
அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது. இதில் ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 348 ரன் இலக்கை எடுத்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்து நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர்,லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயம்.அதே போல் ஆல்-ரவுண்டர் வரிசையில் கேதர் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் உள்ளனர்.
அணிக்கு பேட்டிங் கைகொடுத்தாலும் பந்து வீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அணி 347 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது பந்து வீச்சில் சற்று முன்னேற்றம் காண வேண்டியது நிலைமை ஏற்பட்டுள்ளது.பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா பந்து வீச்சும் முந்தைய போட்டியில் எடுபடவில்லை. இன்று இந்திய அணி பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
அதே போல் நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் பேட்டிங்கில் அச்சுருத்தும் வைகையில் உள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசி.,வெற்றிப்பெற இவருடைய சதம் காரணமாக இருந்தது. ஹென்றி நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.நியூசி., அணியும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது.பந்து வீச்சில் டிம் சவுத்தி, பென்னட், சான்ட்னர், சோதி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.