இன்று இந்தியா – நியூஸிலாந்து இடையேயான 3-ஆம் நாள் ஆட்டம் காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, களம்கண்ட நியூசிலாந்து அணி 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மத்தியில் இறங்கிய ஜேமிசன் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அஸ்வின் 4, முகமது சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர் இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…