சூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு

Published by
kavitha
  • இரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி.
  • சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளனர்.

Image

முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தது. 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய நியூஸிலாந்து அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால்  போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 13ரன்கள் எடுத்தது.அடுத்து களமிரங்கிய இந்திய அணி  20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் குறித்து கோலி கூறுகையில் கடந்த இரண்டு ‘டை’ ஆட்டங்களில் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு உள்ளேன். எதிர் அணியினர் நன்றாக ஆடும்போது பொறுமை காத்து கடைசியில் மீண்டெழுகின்ற அந்த வாய்ப்பைத்தான் கூறுகிறேன்.இது போல விறுவிறுப்பான ஆட்டத்தினை ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது . இதற்கு முன் சூப்பர் ஓவரில் ஆடியதில்லை, ஆனால் த்ற்போது தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவரில் வென்று உள்ளோம். இது  நம் அணியின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

விறுவிறுப்பான இந்த சூப்பர் ஓவரில் முதலில் சாம்சனையும் ராகுலையும் தான் அனுப்புவதாக முடிவாக இருந்தது ஆனால் ராகுல் என்னிடம் நீங்கள்  இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என் அனுபவம்,களத்தில் ஆடும் விதம் உதவும் என்றார், இதனை அடுத்தே நானும் ராகுலும் களத்தில் இறங்கினோம், ராகுலின் 2 அதிரடி அடி முக்கியமாக அமைந்தது, மறுபக்கம் சைனி மீண்டும் தனது வேகத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தைய சுவரஸ்சியம் நிறைந்த வெற்றிகள் பெருமை அளிக்கின்றது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

Recent Posts

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

9 minutes ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

16 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

16 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

17 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

18 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

18 hours ago